Wednesday, August 15, 2018

www.bioticsuperfoods.com
www.supremebiofoods.com


எது நல்ல எண்ணெய்?

அடர்த்தியாக, கொழகொழப்புத் தன்மையுடன், நிறமும் மணமும் தூக்கலாக இருக்கும் செக்கு எண்ணெய்தான் ஆரோக்கியம் தரும் சத்துகள் நிறைந்தது. இதில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. இரும்புச் சத்து, துத்தநாகம், மெக்னீசியம், செம்பு, கால்சியம் ஆகியவை செக்கு எண்ணெயில் இயற்கையாக கிடைக்கின்றன. மூட்டுகள், இரைப்பை, குடல் இலகுவாக இயங்குதல், நரம்புகள், ரத்த நாளங்கள் திண்மை பெறுதல், தோல் மிருதுவாக வளையும் தன்மை பெறுதல், அத்தியாவசிய நொதிகள் உற்பத்தி போன்றவற்றுக்கு கொழுப்புச் சத்து தேவை. இது ஒரு டேபிள் ஸ்பூன், அதாவது 20 மில்லி செக்கு எண்ணெயில் கிடைத்துவிடும்.

குயின் ஆஃப் ஆயில்

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர். ‘வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு’ என்று கூறினர் முன்னோர்கள். எவ்வளவு தீர்க்கமாக யோசித்து சொல்லியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய்தான் பயன்படுத்தப்பட்டது. நமது பாட்டன், பூட்டன்கள் 80, 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். நல்ல உணவுக்கு சுத்தமான எண்ணெய்தான் அடிப்படை. அதிலும் ‘குயின் ஆஃப் ஆயில்’ எனப்படும் நல்லெண்ணெய் உடலை உரமாக்கும். பாமாயில், சன்ஃபிளவர் ஆயில் உள்ளிட்ட ரீஃபைண்டு ஆயிலைத் தவிர்த்து, இயற்கையான  சத்துகள் நிறைந்த நமது பாரம்பரிய எண்ணெய் வகைகளை உணவில் சேர்த்து ஆரோக்கியம் பேணுவோம். இந்தியா 3-ம் தர பொருட்களுக்கான சந்தை அல்ல என்பதை நிரூபிப்போம்.